சூர்யா திரைப்பட நடிகர், திரைப்படத் தயாரிப்பாளர் மற்றும் தொலைக்காட்சித் தொகுப்பாளர் ஆவார். இவர் 1997 ஆம் ஆண்டு முதல் நேருக்கு , நந்தா, காக்க காக்க, பிதாமகன்போன்ற பல வெற்றித் திரைப்படங்களில் நடித்ததன் மூலம் தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராவார். இவரின் நடிப்புத் திறனால் மூன்று தமிழக அரசு திரைப்பட விருதுகள், நான்கு தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள், இரண்டு எடிசன் விருதுகள், ஒரு சினிமா விருதுகள் மற்றும் விஜய் விருதுகள் போன்றவை வென்றுள்ளார்
இந்நிலையில் சூர்யாவின் 47 வது பிறந்த நாளை வரும் ஜூலை 23ஆம் தேதி கொண்டாட உள்ளார். அவரது பிறந்த நாளை முன்னிட்டு காமன் டிபி ஒன்று இன்று மாலை ஆறு மணிக்கு வெளியிடப்பட உள்ளது. டீ கிளாஸ் மற்றும் காப்பு இருப்பது போன்ற போஸ்டர் இதற்காக நேற்று வெளியிடப்பட்டுள்ளது. அதேபோல் சூர்யா பிறந்தநாளுக்கு வாடிவாசல், சூர்யா 42 படங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.