Categories
சினிமா தமிழ் சினிமா

ரெடியா இருங்க… தனுஷ் பிறந்தநாள் ஸ்பெஷல்… ‘D43’ பர்ஸ்ட் லுக் ரிலீஸ்…!!!

கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை வெளியாகவுள்ளது .

தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் தனுஷின் 43-வது படத்தை கார்த்திக் நரேன் இயக்கி வருகிறார். இந்த படத்தில் மாஸ்டர் பட நடிகை மாளவிகா மோகனன் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் சமுத்திரக்கனி, ஸ்மிருதி வெங்கட், மகேந்திரன், கிருஷ்ணகுமார் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார்.

தற்போது ஹைதராபாத்தில் இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நடிகர் தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு நாளை (ஜூலை 28) ‘D43’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் நாளை இந்த படத்தின் டைட்டிலும் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |