Categories
சினிமா தமிழ் சினிமா

ரெடியா இருங்க தல ரசிகர்களே… ‘வலிமை’ முதல் பாடல் ரிலீஸ் நேரம் அறிவிப்பு…!!!

அஜித் நடிப்பில் உருவாகிவரும் வலிமை படத்தின் முதல் பாடல் இன்று இரவு வெளியாகவுள்ளது.

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் அஜித் நடிப்பில் உருவாகி வரும் படம் வலிமை. இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கும் இந்த படத்தில் ஹூமா குரேஷி கதாநாயகியாகவும், கார்த்திகேயா வில்லனாகவும் நடிக்கின்றனர். போனி கபூர் தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். மேலும் இன்று இந்த படத்தின் முதல் பாடல் வெளியாகும் என சமூக வலைத்தளங்களில் தகவல் பரவி வந்தது.

இந்நிலையில் வலிமை படத்தில் இடம்பெற்ற ‘நாங்க வேற மாதிரி’ என்ற பாடல் இன்று இரவு 10:45 மணிக்கு வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்த பாடலை விக்னேஷ் சிவன் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது அஜித் ரசிகர்கள் இந்த பாடலுக்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

Categories

Tech |