நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. பெரும்பாலான மாநிலங்களில் அனைத்து வகுப்பு மாணவர்களும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அடுத்த கல்வியாண்டு தொடங்கி விட்டதால் மாணவர் சேர்க்கை நடந்து கொண்டிருக்கிறது. இந்த கல்வியாண்டு ஆன்லைன் மூலமாகவே நடத்தப் படுமா அல்லது பள்ளிகள் திறக்கப் படுமா என்று மாணவர்கள் மத்தியிலும் பெற்றோர்கள் மத்தியிலும் கேள்வி எழுந்துள்ளது. பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வருவதால், பள்ளிகள் திறப்பு குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
இதையடுத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடந்து கொண்டிருக்கிறது. நாடு முழுவதும் உள்ள நவோதயா பள்ளிகளில் 6 ஆம் வகுப்பில் சேர விண்ணப்பித்துள்ள மாணவர்களுக்கான நுழைவுத்தேர்வு வருகின்ற ஆகஸ்ட் மாதம் 11 ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. நாடு முழுவதும் மொத்தமாக உள்ள 47,320 இடங்களில் சேர 24,17,009 பேர் விண்ணப்பம் செய்துள்ளனர்.