போலீசாரை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு அவர் அனுப்பியுள்ள கடிதத்தில், தமிழகத்தில் முக்கிய விழாக்கள் வர உள்ளதால் அரசியல் கட்சியினர்,ஜாதி மற்றும் மத அமைப்பினர் அதிக அளவில் பங்கேற்க வாய்ப்பு உள்ளது.மோதல் சம்பவங்கள் ஏற்பட்டு சட்டம் மற்றும் ஒழுங்கு பிரச்சனை ஏற்படாமல் தகுந்த பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் ஒலி பெருக்கிகள் மூலம் போராட்டக்காரர்களை கலைப்பதற்கும், போராட்டம் நடக்கும்போது அதனை ஒளிப்பதிவு செய்யவும் காவலர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும். நகர மற்றும் மாவட்ட ஆயுதப்படை காவலர்களை தயார் நிலையில் வைத்து முக்கிய நிகழ்வுகள் மற்றும் அவசரகால பணிகளுக்கு உட்படுத்த அனைத்து போலீஸ் கமிஷனர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என தெரிவித்துள்ளார்.