இன்று மாலை 6 மணிக்கு வலிமை படத்தின் மோஷன் போஸ்டரை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது .
தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் அஜித் நடிப்பில் ஹெச். வினோத் இயக்கத்தில் வலிமை திரைப்படம் தயாராகி வருகிறது. இந்த படத்தில் ஹூமா குரேஷி கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் பிரபல தெலுங்கு நடிகர் கார்த்திகேயா வில்லனாக நடிக்கிறார். போனி கபூர் தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். தற்போது வலிமை படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த படத்தின் அப்டேட்டுக்காக அஜித் ரசிகர்கள் கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கும் மேலாக காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் அஜித் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் வகையில் இன்று மாலை 6 மணிக்கு வலிமை மோஷன் போஸ்டரை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது . விரைவில் இதுகுறித்த அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது . தற்போது டுவிட்டரில் ValimaiMotionPoster என்ற ஹேஸ்டேக் டிரெண்டாகி வருகிறது .