நடிகர் விஜய் நடிப்பில் உருவாகவுள்ள தளபதி 65 படத்தின் அப்டேட் குறித்த வீடியோ ஒன்றை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் விஜய்யின் 65-வது படத்தை இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்க உள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கவுள்ளார். இந்த படத்தில் கதாநாயகியாக நடிகை பூஜா ஹெக்டே நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியானது. மேலும் தளபதி 65 படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தொடங்கிவிட்டதாகவும் ஏப்ரல் மாதம் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் எனவும் கூறப்படுகிறது.
#Thalapathy65 update today 5 PM! @actorvijay @Nelsondilpkumar @anirudhofficial#Thalapathy65bySunPictures pic.twitter.com/ZdW8BKkERD
— Sun Pictures (@sunpictures) March 24, 2021
இந்நிலையில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது சமூக வலைத்தள பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் தளபதி65 படத்தின் முக்கிய அப்டேட் இன்று மாலை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அப்டேட் என்னவாக இருக்கும் என்பதை காண விஜய் ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.