விஷாலின் 31-வது படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் விஷால் தற்போது எனிமி, துப்பறிவாளன்-2 போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார். இதுதவிர விஷாலின் 31-வது படத்தை அறிமுக இயக்குனர் து.பா.சரவணன் இயக்கி வருகிறார். இந்த படத்தில் இளம் நடிகை டிம்பில் ஹயாதி கதாநாயகியாக நடிக்கிறார்.
#Vishal31 – Title & First Look from Tomorrow !!@VffVishal pic.twitter.com/mK8RYtETyS
— Vishal (@VishalKOfficial) August 28, 2021
மேலும் யோகி பாபு, அகிலன், ரவீனா, பாபு ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். விஷாலின் பிலிம் பேக்டரி நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்நிலையில் நடிகர் விஷாலின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை (ஆகஸ்ட் 29) வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது .