‘வாரிசு’ படத்தின் 3ஆவது சிங்கிள் பாடல் நாளை மாலை வெளியாகும் என படக் குழு அறிவித்துள்ளது.
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் தளபதி விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு தயாரித்துள்ள இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடிக்க, பிரகாஷ் ராஜ், சரத்குமார், ஷாம், யோகி பாபு, குஷ்பு, மீனா, சங்கீதா, சம்யுக்தா உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தியேட்டரில் ரிலீஸ் ஆகிறது.
இதனையடுத்து சமீபத்தில் வாரிசு படத்தின் முதல் பாடலான ‘ரஞ்சிதமே’ அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து வாரிசு படத்தின் புதிய போஸ்டர் ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டனர். அந்த போஸ்டரில் கையில் கிளாஸ் உடன் தளபதி விஜய் கெத்தாக அமர்ந்திருந்தார்.
இதனைத்தொடர்ந்து வாரிசு படத்தின் ‘தீ தளபதி’ பாடலை டிசம்பர் 4ஆம் தேதி படக்குழுவினர் வெளியிட்டனர். எஸ்.டி.ஆர் (சிம்பு) குரலில் அமைந்துள்ள இந்த பாடலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இந்நிலையில் வாரிசு படத்தின் 3ஆவது சிங்கிள் பாடல் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகும் என தயாரிப்பாளர் தில் ராஜு ட்விட்டரில் அறிவித்துள்ளார். இப்பாடலை சித்ரா பாடியுள்ளார். நாளை மாலை 5 மணிக்கு ‘வாரிசு’ படத்தின் 3ஆவது பாடல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் ரசிகர்கள் மீண்டும் மரண வெயிட்டிங்கில் உள்ளனர்.
https://twitter.com/DilRajuOfficial/status/1604801464190529536