Categories
பல்சுவை

ரெட்மி பிளானில் புதிய ஸ்மார்ட் போன்…. அதுவும் குறைந்த விலையில்…. இதோ முழு விவரம்….!!!

இந்தியாவில் redmi தயாரிப்பாளரான சீனா புதிய ஸ்மார்ட்போன்களை அவ்வப்போது அறிமுகப்படுத்தி வருகிறது. அதன்படி தற்போது ரெட்மி ஏ1 மற்றும் ரெட்மி 11 பிரைம் 5ஜி ஆகிய 2 ஸ்மார்ட்போன்கள் வெளியிடப்பட உள்ளன. அவற்றைப் பற்றி அறிந்து கொள்ளவதற்கு ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக உள்ளனர். இந்த 2 ஸ்மார்ட்போன்களின் விலையும் மிகக் குறைவு. அதில் ஒன்று 4ஜி போன், மற்றொன்று 5ஜி ஸ்மார்ட்போன். ரெட்மியின் பட்ஜெட் 4ஜி போன் எப்போது வெளியிடப்படும் , அதன் விலை எவ்வளவு? மற்றும் அதில் உள்ள அம்சங்கள் என்ன என்பதை இங்கே தெரிந்து கொள்ளலாம். ரெட்மியின் புதிய ஸ்மார்ட்போனான ரெட்மி ஏ1 வரும் நாட்களில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. அதாவது, இந்தியாவில் இந்த ஸ்மார்ட்போன் நாளை அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இது பட்ஜெட் ஸ்மார்ட்போனாக இருக்கும்.

இந்த ஸ்மார்ட்போன் கருப்பு, பச்சை மற்றும் நீலம் ஆகிய மூன்று வண்ணங்களில் வெளியிடப்படும். அதன் வடிவமைப்பும் மிகவும் சிறப்பாக உள்ளது. அதனை தொடர்ந்து 91Mobiles-ன் படி, Redmi A1 ஆனது Mediatek Helio G22 சிப்செட் மூலம் இயக்கப்படும். 6.52-இன்ச் HD+ டிஸ்ப்ளே, 1600 x 720 பிக்சல்கள் தீர்மானம் மற்றும் 20:9 விகிதத்தைக் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் 2ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி ஸ்டோரேஜ் கொடுக்கப்பட்டுள்ளது. இதை 1டிபி வரை அதிகரிக்கலாம். இது 5000mAh பேட்டரி மற்றும் 10W சார்ஜிங் ஆதரவைப் பெறுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் 8MP கேமரா மற்றும் 5MP முன்பக்க கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் கைரேகை ஸ்கேனர் வராது. இதனுடன் அறிமுகப்படுத்தப்படும் Redmi 11 Prime 5G குறித்த எந்த தகவலும் வெளியாகவில்லை.

Categories

Tech |