தமிழக அமைச்சராக பதவியேற்றுள்ள உதயநிதி ஸ்டாலின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் என்ற நிறுவனத்தை தொடங்கி படங்களைத் தயாரித்தும், வினியோகித்தும் திரைப்படத் தொழிலில் ஈடபட்டு வந்தார். இதற்கிடையில் அந்நிறுவனம் வெளியிடும் படங்களின் விளம்பரங்களில் இதுவரை “உதயநிதி ஸ்டாலின் வழங்கும்” என அனைத்து விளம்பரங்களிலும் கண்டிப்பாக குறிப்பிடப்பட்டிருக்கும். அந்த நிறுவனம் கடைசியாக தயாரித்த கலகத் தலைவன் மற்றும் கட்டா குஸ்தி படம் போன்றவற்றிலும் அப்படித்தான் குறிப்பிடப்பட்டு இருந்தது.
உதயநிதி ஸ்டாலின் அமைச்சரான பிறகு அனைத்து விளம்பரங்களிலும் மாற்றம் செய்யப்பட்டு “உதயநிதி ஸ்டாலின் வழங்கும்” என்ற வாசகம் நீக்கப்பட்டு உள்ளது. இப்போது கட்டா குஸ்தி விளம்பரங்களிலும், அடுத்து அந்நிறுவனம் வெளியிடவுள்ள செம்பி படத்தின் போஸ்டர்களிலும் இம்மாற்றத்தை பார்க்கலாம். இதனிடையில் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தொடர்ந்து படங்களைத் தயாரிக்குமா (அ) வினியோகம் செய்வதுடன் மட்டும் நிறுத்திக்கொள்ளுமா என்பது குறித்த பேச்சுக்கள் இப்போது கோலிவுட் வட்டாரங்களில் அதிகம் எழுந்துள்ளது..