சென்னையில் ப்ளூ லைன், கிரீன் லைன் என இரண்டு மெட்ரோ ரயில் வழித்தடங்கள் பயன்பாட்டில் இருந்து வருகின்றது. இந்த வழித்தடங்களை நீட்டிக்கும் பணிகளுடன், புதிய வழித்தட பணிகளும் முடக்கிவிடப்பட்டுள்ளது. அதன்படி பர்பிள் லைன், ஆரஞ்சு லைன், ரெட் லைன் உள்ளிட்டவை அடுத்தடுத்து வர உள்ளது. இதில் சோளிங்கநல்லூர் முதல் மாதாவரம் பால்பனை வரையில் ரெட் லைன் மெட்ரோ ரயில் திட்டத்தின் முதல் கட்ட பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இந்த புதிய மெட்ரோ ரயில் பாதையில் நாதமுனி மற்றும் திருமங்கலம் இடையில் அண்ணா நகர் பணிமனை மெட்ரோ நிலையம் அமைக்கப்பட உள்ளது. இந்த நிலையம் மற்றும் பாதை கட்டுமான பணிகள் கடந்த மாதம் தொடங்கியது. இதற்கு முன்னதாக தற்காலிக இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டு நிலத்தை சமன் செய்யும் பணிகள் நடைபெற்றது.
இதனையடுத்து தூண்டுகள் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக இரண்டு பிரம்மாண்டமான இயந்திரங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது. இதன் மூலம் திருமங்கலம் 100 அடி சாலையில் பள்ளம் தோன்றும் பணிகள் நடந்து முடிந்து, கட்டுமான பணிகள் நடந்து கொண்டிருக்கிறது. இதனையடுத்து இந்த சாலையில் பகல் நேரங்கள் அதிகப்படியான போக்குவரத்து நெரிசல் காணப்படுவதால் வாகனஒட்டிடிகளுக்கும் பொதுமக்களுக்கும் இடையே இடையூறு ஏற்படாத வகையில் இரவு நேரத்தில் பணிகள் மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து ரெட் லைன் மெட்ரோ ரயிலானது பர்பில் லைன் வழிதடத்தில் சோளிங்கநல்லூர் மற்றும் மாதவரம் பால் பண்ணை ஆகிய ரயில் நிலையங்கள் இன்னைக்கும் வகையில் அமைக்கப்பட உள்ளது.
இதன் மூலம் கிழக்கு கடற்கரை சாலை பகுதிகளை நகரின் மேற்கு மற்றும் பிற பகுதிகளை சேர்ந்தவர்கள் எளிதில் வந்தடையலாம். மேலும் ஐடி நிறுவனங்கள் உள்ளிட்டவற்றில் வேலை செய்பவர் விரைவாகவும், பாதுகாப்பாகவும் சென்றுவர மெட்ரோ ரயில் பயணம் உதவுகிறது. இந்த திட்டம் நிறைவடைய 4 முதல் 5 ஆண்டுகள் வரை ஆகலாம் என்று கூறப்படுகிறது. அதனைப் போல சிப்காட் 2 முதல் மாதவரம் பால் பண்ணை வரையில் பர்பிள் லைன் கலங்கரை விளக்கம் மெட்ரோ முதல் பூவிருந்தவல்லி புறவழிச்சாலை வரையிலான ஆரஞ்சு லைன் மெட்ரோ ரயில் சேவைகளும் பயன்பாட்டிற்கு வந்துவிட்டால் சென்னை மாநகர் மற்றும் என்று புறநகர் பகுதிகளும் முழுமையான அளவில் மெட்ரோவால் இணைக்கப்படும். அதன் பிறகு போக்குவரத்து நெரிசலின்றி பயணம் இனிதாக அமையும் என்று தகவல் தெரிவிக்கின்றனர்.