தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வருபவர் அரவிந்த்சாமி. இவர் நடிப்பில் சமீபத்தில் ரெண்டகம் என்ற திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்தை மலையாளத்தில் ஒட்டு என்ற பெயரில் வெளியிட்டிருந்தனர். இந்த படம் சமீபத்தில் ரிலீசாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் நிலையில், கடந்த 6-ம் தேதி படத்தை ஓடிடியில் வெளியிட முடிவு செய்தனர். இந்நிலையில் சென்னை வளசரவாக்கத்தை சேர்ந்த கிஷோர் குமார் என்பவர் சென்னை உயர்நீதி மன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில் இந்த படத்தின் கதையை ஜாவா என்ற பெயரில் இயக்குவதற்காக நான் அரவிந்த்சாமியிடம் கதை சொல்லி இருந்தேன்.
இந்த கதையை நான் பதிவு செய்து அதற்கான காப்புரிமையை பெற்றிருந்தேன். ஆனால் என்னுடைய கதையில் தமிழில் ரெண்டகம் என்ற பெயரில் படம் வெளியாகியுள்ளது. எனவே ஓடிடியில் படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார். அந்த மனு தொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதி படத்தை ஓடிடியில் வெளியிட இடைக்கால தடை விதித்தார். மேலும் வருகிற அக்டோபர் 10-ஆம் தேதிக்குள் படத்தின் தயாரிப்பு நிறுவனம் உட்பட 5 பேர் 10 லட்ச ரூபாயை டெபாசிட் செய்ய வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டார்.