தூத்துக்குடியில் கணவனை மனைவி வெட்டி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டியில் இருக்கும் லாயல்மில் என்ற காலனியில் வசித்து வருபவர் பிரபு (38). இவரது மனைவி உமா மகேஸ்வரி. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். பிரபு தனியார் மில் ஒன்றில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் நேற்று அதிகாலையில் பிரபு மற்றும் உமா மகேஸ்வரிக்கு இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த உமாமகேஸ்வரி தன் கணவரை வெட்டிக்கொலை செய்துள்ளார்.
இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிரபுவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.இதனைத்தொடர்ந்து காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் இரண்டாம் திருமணம் செய்ய முயற்சி செய்ததால் உமா மகேஸ்வரி தான் கணவர் பிரபுவை வெட்டி கொலை செய்தது உறுதியாக தெரியவந்தது. இதனையடுத்து காவல்துறையினர் அவரை கைது செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.