Categories
அரசியல்

“ரெண்டே நாள் தான்” சசிகலா போட்ட வேற லெவல் பிளான்….. எடப்பாடியின் சீக்ரெட் ஆர்டர்….. அதிமுகவில் அடுத்தடுத்த டூவிஸ்ட்…..!!!

அதிமுக கட்சியில் ஒற்றை தலைமை பிரச்சனையானது விஸ்வரூபம் எடுத்த நிலையில், ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் எதிரெதிர் துருவங்களாக மாறி ஒருவரை கூறுவர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இருப்பினும் கட்சியின் பெரும்பாலான நிர்வாகிகள் எடப்பாடி பக்கம் இருப்பதால் எடப்பாடியின் கை தான் ஓங்கி இருக்கிறது. கடந்த மாதம் 11-ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தின் போது எடப்பாடி பழனிச்சாமி இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப் பட்டார். இதை எதிர்த்து ஓ. பன்னீர்செல்வம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். இது கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், தன்னுடைய பதவியை எப்படியாவது தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்பதில் எடப்பாடி பழனிச்சாமியோ தீவிரமாக இருக்கிறார்.

இவர் எப்படியாவது தன்னுடைய ஆதரவு வட்டத்தை பெருக்கி இடைக்கால பொதுச் செயலாளர் பதவியில் இருந்து அடுத்த கட்டத்திற்கு சென்று விடலாம் என்ற முடிவில் இருக்கிறார். இதன் காரணமாக தன்னுடைய ஆதரவாளர்கள் வேறு அணிக்கு மாறிவிடக்கூடாது என்பதில் மிகவும் கண்ணும் கருத்துமாக இருக்கிறார். இந்நிலையில் சசிகலா எடப்பாடியின் சொந்த மாவட்டமான சேலத்திற்கு 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இந்த தகவலை தெரிந்து கொண்ட எடப்பாடி பழனிச்சாமியும் உடனடியாக சேலத்திற்கு கிளம்பி சென்றுள்ளார். சசிகலா தான் எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராக ஆக்கினார் என்பது ஊரறிந்த உண்மை. அதாவது சசிகலா சிறை செல்வதற்கு முன்பாக எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராக நியமித்தார்.

தான் சிறையில் இருந்து வந்த உடன் எடப்பாடி பழனிச்சாமி தன்னிடம் பதவியை ஒப்படைத்து விடுவார் என்று நினைத்துக் கொண்டிருந்த சசிகலாவுக்கு தலை மேல் இடி விழுந்தது போல் எடப்பாடி பழனிச்சாமி தன்னுடைய பதவியை தக்க வைத்துக் கொண்டு ஓ. பன்னீர்செல்வத்தயே கட்சியிலிருந்து நீக்கி விட்டார். அதோடு சசிகலா கட்சிக்குள் மீண்டும் வருவதையும் எடப்பாடி பழனிச்சாமி விரும்பவில்லை. இப்படிப்பட்ட சூழ்நிலையில் தான் சேலம் மாவட்டத்திற்கு சசிகலா சென்ற தகவலை தெரிந்து கொண்ட எடப்பாடி பழனிச்சாமி அங்கு எவ்வித குழப்பமும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக தன்னுடைய ஆதரவாளர்களை வைத்து சசிகலாவை தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்று ரகசிய ஆர்டர் போட்டுள்ளார்.

இதனைடுத்து சேலம் செல்லும் சசிகலா நாளை பெத்தநாயக்கன்பாளையம், வாழப்பாடி மற்றும் ஆத்தூர் தொகுதிகளில் நடைபெறும் பொதுக்குழு கூட்டங்களில் கலந்து கொண்டு பொது மக்களை சந்தித்து பேசிவிட்டு, அண்ணா பூங்காவில் உள்ள எம்ஜிஆர் சிலை மற்றும் ஜெயலலிதாவின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த இருக்கிறார். அதன்பின் சேலத்தில் இரவு தங்கும் சசிகலா மறுநாள் காலை ஈரோட்டிற்கு புறப்பட்டு செல்கிறார். இந்த நடவடிக்கைகளை தீவிரமாக கண்காணிக்க சொல்லிய எடப்பாடி பழனிச்சாமி தன்னுடைய அணியினர் கட்சி மாறி விடக்கூடாது என்பதற்காக சசிகலா தங்கும் 2 நாட்களும் சேலத்தில் தங்குவதற்கு முடிவு செய்துள்ளார். அவர் சேலத்தில் இருந்தால் தொண்டர்கள் எடப்பாடிக்கு பயந்து அணி தாவ மாட்டார்களாம் என்று தெரிந்த வட்டாரங்கள் கூறுகிறது.

Categories

Tech |