சென்னை ரெப்கோ பேங்கில் காலியாக இருக்கும் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பானது தற்போது வெளியாகியிருக்கிறது. இந்த அறிவிப்பின் அடிப்படையில் Officer on Special Duty மற்றும் Temporary Translator/ Typist பதவிக்கு என 8 பணியிடங்கள் காலியாக இருக்கிறது.
காலிப் பணியிடங்கள்
# Officer on Special Duty (OSD)-Credit-2 பணியிடங்கள்
# Officer on Special Duty (OSD)-Inspection-3 பணியிடங்கள்
# Officer on Special Duty (OSD)-IR & Vigilance- 1 பணியிடம்
# Temporary Translator/Typist-Hindi-1 பணியிடம்
# Temporary Typist-Tamil-1 பணியிடம்
வயதுவரம்பு
OSD பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வம் இருப்பவர்கள் வயதானது 30/09/2022 தேதியின்படி, அதிகபட்சம் 62 க்குள் இருக்கவேண்டும். Temporary Typist வயதானது 21 -28க்குள் இருக்கவேண்டும்.
தேர்வு செயல்முறை
தேர்வுசெய்யப்பட்ட விண்ணப்பதாரர்கள் நேர்காணல்/ சான்றிதழ் சரிபார்ப்பு வாயிலாக அழைக்கப்படுவர். நேர்காணல் விபவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.
Repco வங்கி கல்வித்தகுதி
ரெப்கோ வங்கியின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பின் அடிப்படையில் விண்ணப்பதாரர் அங்கீகரிக்கப்பட்ட வாரியங்கள் (அ) பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒன்றில் 10-வது, 12-வது, பட்டப் படிப்பை முடித்திருக்கவும்.
சம்பள விபரம்
Officer on Special Duty பதவிக்கு என மாதத்துக்கு ரூபாய்.40,000 சம்பளம் வழங்கப்படவுள்ளது. அத்துடன் நாளொன்றுக்கு ரூபாய்.220 உணவுக்கு வழங்கப்படும். Translator / Typist பதவிக்கு மாதம் ரூபாய்.11,000 -ரூ.20,000 சம்பளம் வழங்கப்படவுள்ளது.
வங்கிபணிக்கு விண்ணப்பிக்கும் முறை
ஆர்வம் மற்றும் தகுதி இருக்கும் விண்ணப்பதாரர்கள் பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்ப படிவத்தின் வாயிலாக ஆப்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர் விண்ணப்பப்படிவத்தை உரிய சுய சான்றளிக்கப்பட்ட ஆவணங்களுடன் பொதுமேலாளர் (நிர்வாகம்), ரெப்கோவங்கி, பி.பி.எண்.1449, ரெப்கோடவர், எண்.33 வடக்கு உஸ்மான் சாலை, தி.நகர், சென்னை 600017 என்ற முகவரிக்கு 15ம் தேதிக்குள் அனுப்பவேண்டும்.