ரிசர்வ் வங்கியானது, இந்தியாவில் பணவீக்கம் தொடர்ந்து உச்சத்தில் இருப்பதால் வட்டி விகிதத்தை உயர்த்த வாய்ப்புள்ளது. ஆர்பிஐ ஜூன் மாதத்தில் இருந்து 3 முறை 50 அடிப்படை புள்ளிகள் உயர்த்திய நிலையில், ரெப்போ விகிதத்தை மேலும் 0.35 சதவீதம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக மே மாதம் திடீரென 40 அடிப்படை புள்ளிகள் உயர்த்தியது. விகிதங்கள் இதுவரை 1.9 சதவீதம் அதிகரித்துள்ளது.
ரிசர்வ் வங்கியின் வட்டி விகித நிர்ணயக் குழுவின் மூன்று நாள் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ், நிதிக் கொள்கைக் குழுவின் (எம்பிசி) கொள்கையை நாளை அறிவிக்கிறார்.