Categories
தேசிய செய்திகள்

ரெம்டிசிவிர் மருந்து தயாரிப்பு நிறுவனங்களுக்கு…. மத்திய அரசு அதிரடி உத்தரவு…!!!

நாடு முழுவதும் கடந்த வருடம் மார்ச் முதல் கொரோனா கோரத்தாண்டவமாடியது. இதையடுத்து கொரோனா அதிகமாக பரவி வந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டதால் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வருகின்றனர். இதற்கு மத்தியில் கொரோனா மீண்டும் வேகமெடுத்து வருகிறது.

மேலும் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் பல்வேறு மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் கொரோனா சிகிச்சைக்கான ரெம்டிசிவிர் மருந்து பதுக்கப்படுவதையும், கள்ளச்சந்தையில் விற்கப்படுவதை தடுக்கவும் மருந்து ஆய்வாளர்களுக்கு மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. ரெம்டிசிவிர் மருந்து தயாரிப்பு நிறுவனங்கள், தம்மிடம் உள்ள இருப்பு விவரங்களை இணையத்தில் வெளியிடவும் உத்தரவிட்டுள்ளது.

Categories

Tech |