நாடு முழுவதும் கடந்த வருடம் மார்ச் முதல் கொரோனா கோரத்தாண்டவமாடியது. இதையடுத்து கொரோனா அதிகமாக பரவி வந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டதால் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வருகின்றனர். இதற்கு மத்தியில் கொரோனா மீண்டும் வேகமெடுத்து வருகிறது.
மேலும் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா சிகிச்சைக்கான ரெம்டெசிவர் மருந்து விலை குறைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. மாநிலங்களிடம் 1.58 கோடி டன் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன. அடுத்த வாரம் மேலும் 1.16 கோடி டோஸ் தடுப்பு ஊசிகள் மாநிலங்களுக்கு தரப்படும் எனவும் மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார்.