கொரோனா சிகிச்சையில் ரெம்டெசிவிர் மருந்தால் எந்த பயனும் இல்லை என உலக சுகாதார அமைப்பு நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
கொரோனா தடுப்பூசி குறித்து உலகின் பல பகுதிகளில் 11000-ற்கும் அதிகமானோரிடம் சோதனை நடத்தப்பட்டது. இந்த ஆய்வின் போது ரெம்டெசிவிர் மருந்தால் கொரோனா இறப்பு விகிதத்தில் மாற்றம் ஏற்படவில்லை என்றும் சிகிச்சையில் எந்த தாக்கமும் காணப்படவில்லை என்றும் தெரியவந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு குறிப்பிட்டுள்ளது. ஆனால் இவை குறைந்த ஆதாரங்களை வைத்து எடுக்கப்பட்ட முடிவு என ரெம்டெசிவிர் மருந்தை உற்பத்தி செய்யும் கிளிங் சயின்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.