Categories
மாநில செய்திகள்

ரெம்டெசிவிர் மருந்து கொள்முதல் செய்யும் திட்டம்…. தொடங்கி வைத்தார் முதல்வர்….!!!!

தமிழகத்தில் இந்த வருடத்தின் தொடக்கத்தில் இருந்தே கொரோனா இரண்டாம் அலை அதிவேகமாக பரவி வருகிறது. அதனால் ஏற்படும் பாதிப்புகளின் எண்ணிக்கையும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை ஏராளம். அதன் காரணமாக கொரோனா பரவலை கட்டுப்படுத்த முதற்கட்டமாக முன்களப் பணியாளர்கள், சுகாதாரத்துறை ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. அதன் பிறகு 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. இதனையடுத்து நாளை முதல் 18 வயதிற்கு மேற்பட்டோருக்கும் தடுப்பூசி போடப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. கொரோனாவில் இருந்து நாம் அனைவரும் தப்பிக்க ஒரே ஆயுதம் தடுப்பூசி மட்டுமே. அதனால் தமிழகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் 5 மாவட்டங்களில் ரெம்டேசிவிர் மருந்து விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், இனி நேரடியாக தனியார் மருத்துவமனைகளில் மருந்து விற்பனை செய்யப்படும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். மக்கள் கூட்டம் அதிகம் கூடுவதை தவிர்க்கவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனையடுத்து ரெம்டெசிவிர்மருந்து தனியார் மருத்துவமனைகள் மூலம் நேரடியாக கொள்முதல் செய்யும் திட்டத்தை இன்று நேரு ஸ்டேடியத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை அமைச்சர், சுகாதாரத்துறை செயலர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Categories

Tech |