ரயில்பெட்டி கழிவறையில் 26 மது பாட்டில்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
காரைக்காலில் இருந்து எர்ணாகுளம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று திருச்சி ஜங்ஷன் வந்தது. அந்த ரெயிலில் ரயில்வே குற்றத்தடுப்பு துப்பறியும் பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வாசுதேவன் தலைமையில் காவல்துறையினர் சோதனை செய்தபோது ரயில் பெட்டியின் கழிவறைக்குள் ஒரு பையில் 26 மதுபாட்டில்கள் இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து காவல்துறையினர் அந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். அதன் மதிப்பு ரூ 5,049 இருக்கும். யாரோ ரயிலில் மதுபாட்டில்களை கடத்தி வந்துள்ளனர். அவர்கள் போலீசாரை பார்த்ததும் அங்கேயே போட்டு விட்டு தப்பித்து சென்றனர். இது குறித்து திருச்சி ரயில்வே பாதுகாப்பு படை காவல் துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.