Categories
தேசிய செய்திகள்

ரெயில்வேயின் ஆரம்பகால புகைப்படங்களுடன்… புவனேஸ்வரில் புதிய ரெயில் அருங்காட்சியகம் திறப்பு…!!!

புவனேஸ்வரில் புதிய ரயில் அருங்காட்சியகம் திறக்கப்பட்டுள்ளது.

ஒடிசா மாநிலம், புவனேஸ்வர் சந்திரசேகர்பூரில் கலிங்கா பாரம்பரிய ரயில் அருங்காட்சியகத்தை ரயில்வே மேலாளர் வித்யாபாலன் திறந்து வைத்தார். இதன் மூலம் ரயில்வேயின் நீண்ட வரலாற்றையும், செழுமையான பாரம்பரியத்தையும் பாதுகாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக ரயில்வே சார்பில் வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மேலும் இந்த அருங்காட்சியகத்தில் பழைய உபகரணம், கருவிகள், தொழில்நுட்ப சாதனங்கள், கலைப்பொருட்கள் புகைப்படங்கள் ஆகியவற்றை பாதுகாக்கப்படுகின்றது. அருங்காட்சியகத்தில் பல்வேறு ஆவணங்கள், பழைய கையேடுகள், ரயில்வே புகைப்படங்கள் ஆகியவையும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

Categories

Tech |