வரும் 3ஆம் தேதி பாகிஸ்தானில் எதிர்க்கட்சிகள் இம்ரான்கான் அரசு மீது கொண்டு வந்துள்ள நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீதான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதனால் அரசியல் ஸ்திரமற்ற நிலை அந்நாட்டில் காணப்படுகிறது. இந்நிலையில் பாகிஸ்தானில் உள்ள கொத்ரி என்ற பகுதியின் அருகே மர்ம நபர்கள் சிலர் ரயில்வே தண்டவாளத்தில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனால் அதன் ஒரு பகுதி சேதமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் அப்பகுதியை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.
தற்போது பராமரிப்பு பணிகள் ரயில்வே தண்டவாளத்தில் நடந்து வருகிறது. இந்த பணிகள் முடிவடைந்தவுடன் மீண்டும் ரயில் சேவை தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த வெடிகுண்டு சம்பவம் தொடர்பில் எந்த ஒரு தனிநபரோ அல்லது அமைப்போ பொறுப்பேற்கவில்லை. இந்த சம்பவத்தால் மாகாணத்தின் பல பகுதிகளில் தற்காலிகமாக ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.