Categories
தேசிய செய்திகள்

ரெஸ்ட் எடுக்கப் போன முதல்வர்…. ஜன்னலை திறந்த காவலாளிக்கு காத்திருந்த அதிர்ச்சி… கல்லூரியில் அரங்கேறிய சம்பவம்…!!!

ஓய்வறையில் கல்லூரி முதல்வர் கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சத்தீஸ்கர் மாநிலம்,  துர்க் மாவட்டம், அகிவாரா பகுதியில் உள்ள அரசு கல்லூரியில் பணியாற்றி வரும் பிபி நாயக் என்பவர் இன்று காலை வழக்கம்போல் கல்லூரிக்கு வந்துள்ளார். பின்னர் ஊழியர்களின் ஓய்வறைக்கு சென்றுள்ளார். சிறிது நேரம் கழித்து அந்த வழியாக சென்ற காவலாளி ஓய்வு அறையின் ஜன்னலில் எட்டிப் பார்த்தபோது, முதல்வர் மின்விசிறியில் தூக்கில் தொங்கி கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் இதுகுறித்து அவர் காவல்துறைக்கு தகவல் அனுப்பினார்.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அவரின் உடலை கைப்பற்றி விசாரணை செய்தனர். மேலும் அவர் தற்கொலை செய்வதற்கு முன்பாக எழுதி வைத்திருந்த கடிதத்தை கைப்பற்றினர். அதில் தனது தற்கொலைக்கு காரணம் என மூன்று நபர்களின் பெயரை குறிப்பிட்டு இருந்தார். அதன் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

Categories

Tech |