தமிழகத்தில் சிறந்த ரேஷன் கடை விற்பனையாளர்கள், எடையாளர்களைத் தேர்வு செய்து பரிசு வழங்கப்படும் என்று சட்டப்பேரவையில் அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. திமுக ஆட்சி பொறுப்பை ஏற்றது முதல் மக்களுக்கு பல திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. தற்போது மாவட்ட அளவில் சிறந்த நியாய கடை விற்பனையாளர்கள் மற்றும் எடையாளர்களைத் தேர்வு செய்து பரிசு வழங்கப்படும் என அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். ரேஷன் கடைகளில் வழங்கப்படும் அரசியல் தரம் இல்லை என புகார் வருவதை அடுத்து இனி குடும்ப அட்டைதாரர்களுக்கு தரமான அரிசி விநியோகிக்கப்படும் எனவும், குடும்ப அட்டை வேண்டி விண்ணப்பிக்கும் அவர்களுக்கு 15 நாட்களில் குடும்ப அட்டை வழங்கப்படும் எனவும் அமைச்சர் சக்கரபாணி தெரிவித்திருந்தார்.
மேலும் ரேஷன் கடைகளில் பாக்கெட் மூலம் அரிசி வழங்கப்படும். சிறுதானியங்கள் ரேஷன் கடைகளின் மூலம் விற்பனை செய்யப்படும், அஞ்சல் வழியாக புதிய மின்னணு குடும்ப அட்டைகள் பயனாளிகளின் இருப்பிடத்திற்கு அனுப்பப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.