Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

ரேஷன்கார்டை அடகு வைத்த கணவர்….. கூலி தொழிலாளி தற்கொலை…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஞாறான்விளையில் இருக்கும் இலங்கை அகதிகள் முகாமில் திருமாகுல சிங்கம்(58) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு மேரி(55) என்ற மனைவியும், 5 குழந்தைகளும் இருக்கின்றனர். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான திருமாகுல சிங்கம் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார். மேலும் ரேஷன் கார்டை அடகு வைத்து மது குடித்ததால் மேரி தனது கணவரை கண்டித்துள்ளார்.

இதனால் மன உளைச்சலில் இருந்த அவர் நேற்று முன்தினம் முகாமுக்கு வெளியே இருக்கும் மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தொழிலாளியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |