Categories
தேசிய செய்திகள்

ரேஷன்ல அதிக பொருள் வேணுமா..? அப்ப 20 பிள்ளையை பெத்துக்கோங்க… உத்ரகாண்ட் முதல்வரின் பேச்சால் சர்ச்சை..!!

ரேஷன் பொருட்கள் அதிக அளவில் வேண்டுமென்றால் 20 குழந்தைகளை பெற்றுக் கொள்ளுங்கள் என்று உத்தரகாண்ட் முதல்வர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரகாண்ட் மாநிலத்தில் பாஜக தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. இதில் உத்தரகாண்டில் முதல்வராக திரேந்திர சிங் என்பவர் ஆட்சி நடத்தி வருகிறார். ஆனால் இவர் முதல்வராக பொறுப்பு ஏற்றதில் இருந்து இவர் ஆட்சி மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை மக்கள் வைத்து வருகின்றனர். முதல்வராக பதவியேற்று ஒரு மாதம் நிறைவடைந்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக சிக்கலில் அவர் உள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு பெண்களின் உடையை பற்றி பேசி இருந்தார்.

கிழிந்த ஜீன்ஸ் பேண்ட் அணியும் பெண்கள் ஒழுக்கம் இல்லாதவர்கள் என்றும், தங்களது குழந்தைகளுக்கு அவர்கள் எடுத்துக்காட்டாக இருக்க மாட்டார்கள் என்றும் அவர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு பலரும் தங்களது எதிர்ப்பை தெரிவித்து வந்தனர், இதையடுத்து அவர் மன்னிப்பு கோரினார். இந்நிலையில் தற்போது 5 கிலோ ரேஷன் பொருள்கள் ஒவ்வொரு குடும்பத்திற்கும் வழங்கப்பட்டு வருகிறது.

ரேஷன் பொருள்கள் அதிகமாக வேண்டும் என்றால் இரண்டு குழந்தைகளு க்கு பதிலாக 20 குழந்தையை பெற்றுக் கொள்ளுங்கள் என்று அவர் தெரிவித்துள்ளார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சிலரது குடும்பங்கள் சிறியதாக இருப்பதால் அவர்களுக்கு அதிக அளவில் ரேஷன் பொருட்கள் கிடைப்பதில்லை அதிக பொருள்கள் வேண்டும் என்றால் அதிக குழந்தைகளை பெற்றுக் கொள்ளுங்கள் என்று அவர் கூறியுள்ளார். இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்,

Categories

Tech |