தமிழகத்தில் குடும்ப அட்டைகள் ஏழை, எளிய மற்றும் நடுத்தர குடும்பத்திற்கு மளிகை பொருட்களை மலிவான விலையில் வாங்குவதற்கு உதவுகிறது. தமிழகத்தில் மொத்தம் 39 மாவட்டங்களில் 33,773 நியாயவிலை கடைகள் இயங்கி வருகின்றன. ஆரம்பத்தில் இருந்த குடும்ப அட்டைகள், தற்போது ஸ்மார்ட் கார்டுகளாக மாற்றப்பட்டுள்ளன. இந்நிலையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு tnpds.gov.in என்ற இணையதளத்தை தமிழக அரசு உருவாக்கியுள்ளது.
இந்த புதிய இணையதளம் மூலமாக புதிய ஸ்மார்ட் கார்டுகள் புதுப்பித்தல், விண்ணப்பங்களின் நிலை , புதிய உறுப்பினர்களை சேர்க்க மற்றும் நீக்க , குடும்பத் தலைவர்பெயர் மாற்றம் செய்ய, நகல் ஸ்மார்ட் கார்டு பெறுதல் மற்றும் முகவரி மாற்றம் செய்ய குடும்ப அட்டை தொடர்பான அனைத்து வசதிகளையும் இந்த இணையதளம் மூலமாக மாற்றலாம் என்று அரசு தெரிவித்துள்ளது.
அதுமட்டுமில்லாமல் ஆண்ட்ராய்டு செல்போனில் ஐ.ஓ.எஸ் அப் வசதி செய்யப்பட்டுள்ளது. இலவச உதவி மையம் தொடர்பு எண்ணான 1967 அல்லது 1800-425-5901 ஆகிய எண்களில் மூலம் தொடர்பு கொள்ளலாம். இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் ஜெயசந்திரன் பானு ரெட்டி அளித்த பேட்டியில் , தேசிய உணவு பாதுகாப்புச் சட்டம் 2013 – இன் படி அனைத்து பொது மக்களுக்கும் உணவு பொருட்கள் அனைத்தும் வழங்கபட்டு வருவதை உறுதி செய்யப்பட வேண்டும்.
மேலும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது .இந்த திட்டத்தின் கீழ் அரசின் நிபந்தனைகள் மற்றும் வழிகாட்டுதல் வெளியிடப்பட்டுள்ளன. நியாயவிலைக் கடைகளில் பயனாளிகளின் ஆதார் அட்டை எண் மற்றும் கைரேகை சரிபார்த்த பிறகே உணவு தானியங்களாகிய அரிசி மற்றும் கோதுமையை குடும்பத்தின் தகுதியுடைய அளவிற்கு பெற்றுக்கொள்ள முடியும் என்று அவர் தெரிவித்துள்ளார் .