தமிழகத்தில் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுடன் ரூ.2000 ரொக்கமாக வழங்க தமிழக அரசு ஆலோசித்து வருகிறது.
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையின் போது அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுடன் சேர்த்து 1000 ரூபாய் ரொக்கமாக வழங்கப்பட்டு வந்தது. அதனால் நீங்கள் அனைவரும் பொங்கல் பண்டிகை உற்சாகத்துடன் கொண்டாடி மகிழ்வார்கள். இந்நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு 1000 ரூபாய் நோக்கமாக வழங்குவது பற்றி தமிழக அரசு ஆலோசித்து வருகிறது. கொரோனா ஊரடங்கு காரணமாக மக்கள் பாதிக்கப்பட்ட நிலையில், கொரோனா நிவாரண நிதியாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு 2000 ரூபாய் வழங்கப்பட்டது.
அந்த தொகையை அப்படியே பொங்கல் பரிசாக வழங்க மாநில அரசு திட்டமிட்டுள்ளது. அதற்கான அறிவிப்பு இம்மாத இறுதி அல்லது ஜனவரி முதல் வாரத்தில் வெளியாக வாய்ப்புள்ளது. அவ்வாறு தமிழக அரசு ரேஷன் அட்டைதாரர்களுக்கு 2000 ரூபாய் பொங்கல் பரிசு வழங்கினால், மக்கள் இந்த வருடம் பொங்கல் பண்டிகையை மிகவும் உற்சாகத்துடன் கொண்டாடி மகிழ்வார்கள்.