புதுச்சேரியில் அனைத்து சிவப்பு ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பிரதம மந்திரி கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் இலவச அரிசி வழங்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த இலவச அரிசி வழங்கும் திட்டமானது 2021-ல் டிசம்பர் மாதம், 2022-ல் ஜனவரி, பிப்ரவரி, மார்ச் உள்ளிட்ட 4 மாதங்களுக்கு நடைமுறையில் இருக்கும்.
அதோடு மட்டுமில்லாமல் மத்திய அரசு நாட்டில் ஏழை, எளிய மக்களின் பசியை போக்கும் வகையில் பிரதம மந்திரி கல்யாண் யோஜனா திட்டத்தின் கீழ் இலவச அரிசியை வழங்கி வருகிறது. மேலும் இந்த திட்டத்தின் மூலம் 5 கிலோ இலவச அரிசி, ஒரு கிலோ விருப்பமான பருப்பு வகை, 5 கிலோ கோதுமை உள்ளிட்டவை மக்களுக்கு வழங்கப்படுகிறது.
இந்த இலவச அரிசி வழங்கும் திட்டமானது கடந்த ஆண்டில் டிசம்பர் மாதம், நடப்பு ஆண்டில் ஜனவரி, பிப்ரவரி, மார்ச் உள்ளிட்ட 4 மாதங்களுக்கு நடைமுறையில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் அனைத்து சிவப்பு ரேஷன் அட்டைதாரர்களுக்கும் இந்த ஆண்டு ஜனவரி மாதம் மற்றும் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஆகிய 2 மாதங்களுக்கான இலவச அரிசி இன்று முதல் வழங்கப்பட உள்ளதாக புதுச்சேரி அரசு அதிரடியாக அறிவித்துள்ளது.
அதன்படி ஏம்பலம், வில்லியனூர், ஊசுடு, மண்ணாடிப்பட்டு, மங்கலம், உழவர்கரை, ராஜ் பவன், உப்பளம், முதலியார் பேட்டை, தட்டாஞ்சாவடி, உருளையன்பேட்டை, பாகூர், நெட்டப்பாக்கம், திருபுவனை உள்ளிட்ட பகுதிகளில் இன்று முதல் இலவச அரிசி வழங்கப்படுகிறது.
எனவே பயனாளிகள் அனைவரும் கட்டாயம் முக கவசம் அணிந்து தனிநபர் இடைவெளியை பின்பற்றி இலவச அரிசியை பெற்றுக் கொள்ளுமாறு அரசு அறிவுறுத்தியுள்ளது. மேலும் சமுதாய நலக்கூடம், தனியார் பள்ளிக்கூடங்கள் மற்றும் அரசு பள்ளிக்கூடங்களில் இலவச அரிசியை பெற்றுக்கொள்ளலாம் என்றும் அரசு தெரிவித்துள்ளது.