Categories
மாநில செய்திகள்

ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்!…. தமிழக அரசு போட்ட அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த ரேஷன் பொருட்கள் பொதுமக்களுக்கு முறையாக சென்றடைய அரசு பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது. அந்த வகையில் தமிழக அரசு ரேஷன் அட்டைதாரர்கள் தெரிந்து கொள்ளும் வகையில் ரேஷன் கடைகளில் உள்ள தகவல் பலகைகளில் அத்தியாவசிய பொருள்களின் கையிருப்பு விவரங்களை காட்சிப்படுத்த வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்த நிலையில் தமிழகத்தில் ரேஷன் கடைகளில் பராமரித்து வைக்க வேண்டிய அறிவிப்பு பலகைகள் குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை ஆணையர் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், “பொது விநியோகத் திட்டத்தின் கீழ் இயங்கும் அனைத்து நியாயவிலை கடைகளிலும் குடும்ப அட்டைதாரர்கள் தெரிந்துகொள்ளும் வகையில் அடிப்படை விபரங்கள் காட்சிப்படுத்தப்பட வேண்டும்.

அதாவது வேலை நேரம், இன்றியமையா பண்டங்கள் இருப்பு விபரம், பொருட்கள் விநியோகம் செய்யப்பட்ட விபரம், விற்பனை விலை உள்ளிட்டவை பலகையில் இடம்பெற வேண்டும். மேலும் ரேஷன் கடை குறித்து புகார் தெரிவிக்க உணவுத்துறை அமைச்சர் 044 25671427, உணவுத்துறை செயலாளர் 044 25672224, உணவுப்பொருள் வழங்கல் ஆணையாளர் 044 28592255 உள்ளிட்டோரின் எண்களும் பலகையில் இடம்பெறவேண்டும்” என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |