Categories
மாநில செய்திகள்

ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்!…. நீங்க புகார் கொடுத்தா போதும்…. தமிழக அரசு புதிய அதிரடி….!!!!

தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ரேஷன் அட்டைதாரர்களிடமிருந்து புகார் வந்தால் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதாவது ரேஷன் கடைகளின் மீது, குடும்ப அட்டைதாரர்கள் ஏதேனும் புகார் அளித்தால் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரித்துள்ளது. பொதுவிநியோக திட்டத்தில் பொறுப்பு மற்றும் வெளிப்படை தன்மையை உறுதி செய்வதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

அதில், கூட்டுறவு சார்பதிவாளர் குறைந்தது ஒரு மாதத்திற்கு 25% ஆணைகளை சரிபார்க்க வேண்டும் எனவும், நல்ல தரமான பொருட்கள் பெறுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும், ரேஷன் கடைகளை சரியான நேரத்தில் திறப்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும், நியாயவிலை கடைகளில் அங்கீகரிக்கப்படாத வெளிநபர் இருப்பதை அனுமதிக்க கூடாது எனவும் சுற்றறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக கிடங்குகளில் திடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் ரேஷன் கடைகளில் வழங்கப்படும் பொருட்களில் தரக்குறைபாடு இருந்தால் ரேஷன் கடைகளை நடத்தும் கூட்டுறவு நிறுவனங்களின் அதிகாரிகளே அதற்கு முழு பொறுப்பு எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Categories

Tech |