Categories
மாநில செய்திகள்

ரேஷன் அட்டைதாரர்களுக்கு வெளியான குட் நியூஸ்…. அமைச்சர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…!!!!!

தமிழ்நாட்டில் புதிதாக 10.95 லட்சம் பேருக்கு புதிய ரேஷன் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது என உணவுத்துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.

திமுக அரசு ஆட்சிக்கு வந்தவுடன் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். புதிய ரேஷன் அட்டைகளுக்கு விண்ணப்பதாரர்களுக்கு சான்றிதழ்களை சரிபார்த்து உடனடியாக அட்டைகளை வழங்க உத்தரவிட்டிருக்கிறார். அதனால் பலபேர் ரேஷன் அட்டைகளுக்கு  விண்ணப்பித்தனர். இவர்களுக்கு புதிய அட்டைகள் வழங்கப்பட்டு வருகிறது. தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் 2022-23 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை அதனைத் தொடர்ந்து வேளாண் பட்ஜெட் பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில் நிதிநிலை அறிக்கை தொடர்பாக விவாதம் மற்றும் கேள்வி நேரம் மூன்றாவது நாளாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற விவாதத்தில் தனி ரேஷன் அட்டை வழங்கப்படும் என எழும்பூர் சட்டமன்ற உறுப்பினர் பரந்தாமன் கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு பதிலளித்த அமைச்சர் “யாரையும் சாராமல் தனியாக வாழும் நபர்களுக்கு ரேஷன் அட்டைகள் வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை தமிழ்நாட்டில் 19, 71,807 பேருக்கு குடும்ப அட்டைகள் வழங்கப்பட உள்ளதாக கூறியுள்ளார். ரேஷன் கடைகளில் கைரேகை பொருந்தாமல் பொருட்கள் வழங்குவதில் சிக்கல் ஏற்படுகிறது அதை தவிர்க்க என்ன நடவடிக்கை எடுக்கப்படுமா  என்ற கேள்வியும்  எழுப்பப்பட்டது.

அதற்கு அமைச்சர் சக்கரபாணி அளித்த பதிலில் தமிழ்நாட்டில் புதிதாக 10.92 லட்சம் பேருக்கு புதிய ரேஷன் அட்டைகள் வழங்கப் பட்டிருக்கிறது. ரேஷன் கடைகளில் பாயிண்ட் ஆஃப் சேல்  கருவியில் தொழில்நுட்ப கோளாறுகள் இருந்தாலும் குடும்ப அட்டைதாரர்களுக்கு கைரேகை வைப்பதை கட்டாயம் ஆகாமல் ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. பாயிண்ட் ஆஃப் சேல்கருவிகளின் தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்டு வருகிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |