ரேஷன் கடைகளில் இனி பொதுமக்களுக்கு பாக்கெட் மூலம் அரிசி வழங்கப்படுவதாக தமிழக உணவுத் துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.
தமிழக அரசின் பல்வேறு துறைகளுக்கு நிதி ஒதுக்குவதற்கான மானியக் கோரிக்கை மீதான விவாதங்களுக்கு சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்தநிலையில் சட்டப்பேரவை உறுப்பினர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு தமிழக உணவுத்துறை அமைச்சர் ஆர் சக்ரபானி அளித்த பதிலில் கூறியதாவது, அஞ்சல் வழியாக புதிய மின்னணு குடும்ப அட்டைகள் பயனாளிகள் இடத்திற்கு அனுப்பப்படும்.
மேலும் பொது விநியோகத் திட்டத்தின் மூலமாக சிறுதானியங்கள், கேழ்வரகு வழங்கப்படும். நீலகிரி, தர்மபுரியில் வசிக்கும் பழங்குடியின மலைவாழ் மக்களின் பிரதான உணவாகும் கேழ்வரகு. நீலகிரி, தர்மபுரியில் ஊட்டச்சத்து குறைபாடு ரத்தசோகை நோய் பாதிக்கப்பட்ட குழந்தைகள் அதிக அளவில் இருக்கின்றனர். அரிசிக்கு பதில் கேழ்வரகு தந்தால் ஊட்டச்சத்து கிடைப்பதுமட்டுமல்லாமல் மக்களின் உணவு பழக்க வழக்கங்களும் மாறுபடும். தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் 50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் முழுமையாக கணினி மயமாக்கப்படும்.
மாவட்ட அளவில் சிறந்த நியாய விலை கடை விற்பனையாளர்கள் தேர்வு செய்து பரிசு வழங்கப்படும் என அவர் கூறினார். இந்நிலையில் அண்மையில் ரேஷன் கடைகளில் வழங்கப்படும் அரசியல் தரம் இல்லை என புகார் வந்ததை தொடர்ந்து இனி குடும்ப அட்டைதாரர்களுக்கு தரமான அரிசி வினியோகிக்கப்படும் எனவும் குடும்ப அட்டை வேண்டி விண்ணப்பித்தால் அவர்களுக்கு ஒரு நாட்களில் குடும்ப அட்டை வழங்கப்படும் எனவும் அமைச்சர் சக்கரபாணி அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.