Categories
தேசிய செய்திகள்

ரேஷன் அட்டைதாரர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. இலவச சிலிண்டர்…. அரசு வெளியிட்ட பலே அறிவிப்பு….!!!!

ரேஷன் அட்டைதாரர்களுக்கு இலவச கேஸ் சிலிண்டர் வழங்குவதற்கு பாஜக அரசு முடிவு செய்துள்ளது. இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது. இதன் மூலமாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு மூன்று கேஸ் சிலிண்டர் இலவசமாக வழங்கப்பட உள்ளது. கோவா மாநிலத்தில் சமீபத்தில் சட்டமன்றத் தேர்தல் நடந்து முடிந்தது. அதில் பாஜக அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. தேர்தலுக்கு முன்பு பாஜக தேர்தல் அறிக்கையில் இலவச கேஸ் சிலிண்டர் வழங்கப்படும்.

ரேஷன் கடைகளில் குறைந்த விலைக்கு பொருட்கள் வழங்கப்படும் என்றும் வாக்குறுதி அளித்தது. நடந்த முடிந்த தேர்தலில் பாஜக வெற்றி பெற்ற கோவா மாநில முதல்வராக பிரமோத் சாவந்த் பதவியேற்றுள்ளார். அதன்பிறகும் ரேஷன் கார்டுதாரர்களுக்கு வருடத்திற்கு மூன்று கேஸ் சிலிண்டர் இலவசமாக வழங்கப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

இந்நிலையில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு இலவச கேஸ் சிலிண்டர் வழங்குவது தொடர்பான முன்மொழிதல் தயாரிக்கும்படி கோவா உணவுத்துறை அமைச்சர் ரேகா ஆர்யா அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். இதற்கு அடுத்த கேபினட் கூட்டத்தில் ஒப்புதல் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. அந்தியோதயா ரேஷன்கார்டு வைத்திருக்கும் அனைவரும் இதில் பயன்பெறலாம். அதன்படி அந்தியோதயா ரேஷன்கார்டு வைத்திருக்கும் குடும்பங்களுக்கு வருடத்திற்கு மூன்று கேஸ் சிலிண்டர் இலவசமாக வழங்கப்படும். அதுமட்டுமல்லாமல் ரேஷன் கடைகளில் மலிவு விலைக்கு உணவுப் பொருட்களை விற்பனை செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதிலும் குறிப்பாக சர்க்கரையை குறைந்த விலைக்கு விற்பனை செய்ய அரசு திட்டமிட்டுள்ளது. சமையல் எண்ணெய் மலிவான விலையில் விற்பனை செய்யப்படும். தற்போது கேஸ் சிலிண்டர் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. பொதுமக்கள் பெரும் நெருக்கடியில் சிக்கி தவித்து வருகின்றனர். இந்த நிலையில் ஆண்டுக்கு மூன்று கேஸ் சிலிண்டர்கள் இலவசமாக வழங்குவது பொது மக்களுக்கு நிவாரணம் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த அறிவிப்பு பொதுமக்கள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |