நாட்டில் உள்ள அனைத்து ஏழை எளிய மக்களுக்கும் பிரதான் மந்திரி கரிப் கல்யன் அன்னயோஜனா திட்டத்தின் மூலமாக இலவச அரிசி மற்றும் கோதுமை முதலான பல்வேறு ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றது. இந்த திட்டம் மூலமாக ஒவ்வொரு மாதமும் 81 கோடி மக்களுக்கு 5 கிலோ உணவு தானியம் வழங்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் ஆண்டுதோறும் சுமார் 26 மெட்ரிக் டன் கோதுமை பயன்படுத்தப்படுகிறது. எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு கோதுமை விளைச்சல் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. அதனால் 42% கோதுமை உற்பத்தி குறைந்துள்ளது. இதன் காரணமாக மத்திய அரசு கோதுமை ஒதுக்கீட்டை குறைத்து அரிசிக்கான ஒதுக்கீட்டை தற்போது உயர்த்தியுள்ளது.
இதனால் மக்களுக்கு குறைவான அளவே கோதுமை வழங்கப்படும்.கோதுமையின் அளவைக் குறைப்பதால் அரிசி வழக்கத்தைவிட அதிகமாக வழங்கப்படும் எனவும் அரசு அறிவித்துள்ளது. அதன்படி மே மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை பல்வேறு மாநிலங்களில் கோதுமை அளவில் குறைவாகவே வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. அதன்பிறகு கோதுமையில் விளைச்சலைப் பொறுத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு கோதுமை வினியோகம் வழக்கம்போல உயர்த்தப்படும். அதுவரை மக்களுக்கு அரிசி விநியோகம் அதிகமாக இருக்கும் என அரசு தெரிவித்துள்ளது.