Categories
மாநில செய்திகள்

ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஷாக் நியூஸ்… இனி இந்தப் பொருள் கிடைப்பதில் சிக்கல்….!!!!!!!

உக்ரைன் போர் காரணமாக கூடுதல் பாமாயில் வழங்கமுடியாது என உணவுப் பொருள் சப்ளை செய்யும் நிறுவனங்கள் தெரிவித்துள்ளதால் ரேஷனில் இனி பாமாயில் கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

தமிழக அரசின் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் வழங்குவதற்காக ஒரு லிட்டர் கொள்ளளவு கொண்ட 4 கோடி பாக்கெட் பாமாயில் எண்ணெய் சப்ளை செய்வதற்காக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் கடந்த வருடம்  டிசம்பர் மாதம் டெண்டர் கோரி இருந்தது. இந்த நிலையில் ஒரு லிட்டர் 120 ரூபாய் 25 காசுகள் என்ற விலையில் பாமாயில் சப்ளை செய்யப்பட்டிருந்த நிலையில், மே 3ஆம் தேதிக்குள் கூடுதலாக பாமாயில் சப்ளை செய்ய வேண்டுமென உணவுப் பொருட்கள் வழங்கும் நிறுவனங்களுக்கு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் உத்தரவு பிறப்பித்திருந்தது.

இந்த நிலையில் இதனை ரத்து செய்ய நுகர்பொருள் வாணிபக் கழகத்திற்கு உத்தரவிடக்கோரி பாமாயில் சப்ளை செய்யும் சென்னையை சேர்ந்த ஸ்டார் ஷைன் லாஜிஸ்டிக், ருச்சி சோயா போன்ற நிறுவனங்களின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. மேலும் இந்த வழக்கில் நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதன் முன்பு இன்று விசாரணைக்கு வந்துள்ளது.

அப்போது மனுதாரர் நிறுவனங்கள் தரப்பில் சூரியகாந்தி எண்ணையை அதிக அளவில் சப்ளை செய்யக்கூடிய நாடுகளான ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே போர் நடைபெற்ற வருவதன் காரணமாக அதன் சப்ளை முழுவதும் நிறுத்தப்பட்டு இருப்பதாகவும், அடுத்தபடியாக உள்ள பாமாயில் தேவை அதிகரித்திருப்பதால் அதன் விலையும் உயர்ந்துள்ளதாக சுட்டிக் காட்டியுள்ளனர். மேலும் மலேசியா, இந்தோனேசியா நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு வரும் பாமாயில் விலை பிப்ரவரி மாதம் ஒரு மெட்ரிக் டன் ஒரு லட்சத்து 15 ஆயிரத்து 290ரூபாயாக இருந்த நிலையில், மார்ச் மாதம் ஒரு லட்சத்து 45 ஆயிரத்து 320 ரூபாயாக விற்பனையானதாகவும், ஆனால் பழைய விலைக்கே கூடுதலாக பாமாயில் சப்ளை செய்ய வேண்டும் என நுகர்பொருள் வாணிப கழகம் உத்தரவிட்டிருக்கிறது.

இதன்படி கூடுதல் பாமாயில் சப்ளை செய்யாவிட்டால் தங்கள் நிறுவனங்களை கறுப்பு பட்டியலில் சேர்த்து அரசு டெண்டர்களில் பங்கேற்க விடாமல் செய்யும் அபாயம் இருப்பதனால் நுகர்பொருள் வாணிப கழக உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என வாதிடுகின்றனர். மேலும் தமிழக அரசு தரப்பில், உக்ரைன் நாட்டில் நடக்கும் போர் உள்நாட்டில் மட்டுமே நடக்கிறது எனவும் கடல் மார்க்கமான வணிகத்திற்கு எந்தவித இடையூறும் இல்லை எனவும் விளக்கம் அளிக்கப்பட்டிருகின்றது.

பாமாயிலை மலேசியா மற்றும் இந்தோனேசியா நாடுகள் மட்டுமல்லாமல் பிற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்ய முடியும் எனவும் கூடுதல் அளவு பாமாயில்  பாக்கெட்டுகளை வழங்க வேண்டுமென தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் உத்தரவில் எந்தவிதமான தவறும் இல்லை எனவும் அரசு தரப்பில் வாதிடப்பட்டது. இந்த நிலையில் அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி சுவாமிநாதன் வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்திருக்கின்றார்.

Categories

Tech |