Categories
மாநில செய்திகள்

ரேஷன் அட்டைதாரர்களுக்கு புதிய விதிகள்?…. வெளியான ஷாக் நியூஸ்…..!!!!!

மத்திய அரசு பொது விநியோகத் திட்டத்தின் வாயிலாக அனைத்து ஏழை, எளிய மக்களுக்கும் மானிய விலையில் அத்தியாவசியப் பொருட்களான எண்ணெய், அரிசி, பருப்பு மற்றும் சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. கொரோனா காலக்கட்டத்தில் மக்கள் அனைவருக்கும் இலவசமாக ரேஷன் பொருட்கள் மற்றும் ரூ.1000 வழங்கப்பட்டது. திமுக சட்டமன்றத் தேர்தலில் ஒவ்வொரு மாதமும் குடும்பத் தலைவிகளுக்கு ரூபாய் 1000 வழங்கப்படும் என்று அறிவித்து இருந்தது. இத்திட்டத்தின் காரணமாக பெரும்பாலான மக்கள் அனைவரும் புது ரேஷன் கார்டுகளை பெற அதிகமாக விண்ணப்பித்து வந்ததும் குறிப்பிடத்தக்கது.

மேலும் ரேஷன் கார்டில் பல்வேறு புதிய செயல்முறைகளை வீட்டில் இருந்தே செய்வதற்கான வசதியையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நிலையில் ரேஷன் கார்டிலுள்ள விதிகளில் மாற்றம்செய்ய இருப்பதாக உணவு மற்றும் பொதுவிநியோகத்துறை முடிவு செய்துள்ளது. அந்த வகையில் ரேஷன் கடைகளில் தகுதியுடைய அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் பொருட்களான அரிசி மற்றும் கோதுமையின் அளவு குறைத்து வழங்கப்படுவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

அதன்படி டெல்லி, மத்தியப்பிரதேசம், உத்தரகாண்ட், குஜராத், உத்தரப்பிரதேசம், பீகார், கேரளா மற்றும் மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் கோதுமை கொள்முதல் சற்று குறைவாக உள்ளதால் இந்த மாற்றத்தை நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளது. இதற்கென புது அளவு பட்டியல் கிட்டத்தட்ட தயாராகி விட்டதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து மாநில அரசுகளுடன் மத்திய உணவு மற்றும் பொது விநியோகத்துறை அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் பலர் மோசடி செய்து போலியான முறையில் ரேஷன் பொருட்களை வாங்கி வருகின்றனர் என்று மத்திய அரசுக்கு தகவல் எழுந்துள்ளது. இதனால் தான் இப்போது அரசு ரேஷன்கார்டில் பல்வேறு விதிகளை மாற்றம் செய்ய இருப்பதாக தெரிவிக்கபடுகிறது. மாநில அரசுகள் அளித்துள்ள பரிந்துரையின் அடிப்படையில் புது தரநிலைகள் தயாரிக்கப்பட்டு விரைவில் இறுதிசெய்யப்பட்டு வெளியிடப்படும் என்று அறியப்படுகிறது.

Categories

Tech |