Categories
தேசிய செய்திகள்

ரேஷன் அட்டைதாரர்களுக்கு…. 3 மாதங்களுக்கு இலவசம்…. வெளியான ஹேப்பி நியூஸ்….!!!

குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது.

இந்தியா முழுவதும் வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் மக்கள் பயன்பெறும் வகையில் நியாயவிலை கடைகளின் மூலமாக மலிவு விலையில் அரிசி, பருப்பு போன்ற அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் உத்தரபிரதேச மாநிலத்தில் அந்தியோதயா யோஜனா திட்டத்தின் கீழ் ஏழை, எளிய மக்களுக்கு பல்வேறு விதமான நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. இந்த மாநிலத்தில் ஆட்சி செய்து வரும் யோகி ஆதித்யநாத் அம்மாநில மக்களுக்காக ஏராளமான நன்மைகளை செய்து வருகிறார்.

இவர் ஆட்சியில் அமர்ந்து 100 நாட்கள் முடிவடைந்துள்ளது. இதன் காரணமாக மாநிலத்தில் உள்ள அனைத்து மக்களுக்கும் ஒரு சிறப்பான பரிசை வழங்குவதற்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் முடிவு செய்துள்ளார். அதன்படி நியாய விலை கடைகளில் பொதுமக்களுக்கு 35 கிலோ அரிசி இலவசமாகவும் மற்ற பொருட்கள் மலிவு விலையிலும் வழங்கப்பட்டு வந்தது. ஆனால் இனி அரிசியுடன் சேர்த்து  பருப்பு, உப்பு, சர்க்கரை போன்ற பொருட்களும் 3 மாதங்களுக்கு இலவசமாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அம்மாநில மக்கள் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கின்றனர்.

Categories

Tech |