Categories
தேசிய செய்திகள்

ரேஷன் அட்டைதாரர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு…. இதை செய்யாவிட்டால் கார்டு ரத்து…. அலர்ட்…..!!!!

நாடு முழுவதும் ரேஷன் அட்டை மூலமாக ஏழை எளிய மக்களுக்கு மலிவு விலையிலும் இலவசமாகவும் வீட்டு உபயோகப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அது மட்டுமல்லாமல் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டமும் அமலில் உள்ளது.இந்த திட்டத்தின் மூலம் ரேஷன் அட்டைதாரர்கள் எந்த மாநிலத்தில் இருந்து வேண்டுமானாலும் பொருட்களை வாங்கிக் கொள்ளலாம். இந்நிலையில் ரேஷன் கார்டு தொடர்பான விதிகளை மத்திய உணவு வழங்கல் துறை மாற்றி அமைக்க உள்ளதாக புதிய தகவல் வெளியாகி உள்ளது.

அதன்படி இனி தகுதியற்றவர்கள் ரேஷன் கார்டு மூலம் பயன்பெற முடியாது. இந்த ரேஷன் கார்டு மளிகை பொருட்கள் பெறுவது மட்டுமின்றி அரசு வழங்கும் சலுகைகளை பெறுவதற்கும் தேவைப்படுகிறது. இத்தகைய பயனுள்ள ரேஷன் கார்டை பெற வாக்காளர் ஐடி, பான் கார்டு மற்றும் பாஸ்போர்ட், குடும்ப உறுப்பினர்களின் புகைப்படம் போன்ற ஆவணங்கள் அனைத்தும் தேவை.

இந்த அடையாளச் சான்றாக இல்லாவிட்டால் ரேஷன் கார்டு உங்களுக்கு கிடைக்காது. அது மட்டுமல்லாமல் உறுப்பினர்களின் பெயர்களை சேர்க்கவும் முடியாது. குறைந்த விலையில் ரேஷன் பொருட்களை பெற விரும்புவோர் மேற்கண்ட ஆவணங்களை சமர்ப்பித்து ரேஷன் கார்டை பெற்றுக் கொள்ளலாம்.மேலும் இந்தியாவில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் தனி ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்கலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |