Categories
மாநில செய்திகள்

ரேஷன் அட்டைதாரர்களுக்கு குட் நியூஸ்….. தமிழக அரசு அதிரடி உத்தரவு…..!!!!

தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் புதிய திட்டம் அமல்படுத்த உள்ளதாக அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளின் மூலமாக ஏழை, எளிய மக்களுக்கு அரிசி, பருப்பு, கோதுமை, சக்கரை முதலான பொருட்கள் மலிவு விலையில் வழங்கப்பட்டு வருகின்றது. ஒருவரின் அந்தஸ்து ஆகியவற்றின் அடிப்படையில் பல தரப்புடைய ரேஷன் அட்டைகள் மக்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த அட்டையை வைத்து பொதுமக்களுக்கு வழங்கப்படும் பொருட்களின் வீதமும், அளவும் மாறுபடுகிறது.

அவ்வபோது ரேஷன் கடைகளில் பலவிதமான மாற்றங்கள் செய்யப்படுவது வழக்கம். கடந்த ஆறு மாதங்களாக ரேஷன் கார்டுகள் தொடர்பாக பல அறிவிப்பு வெளியாகி வருகிறது. ரேஷன் பொருட்களை பொதுமக்களுக்கு வழங்கும் போது சிந்தாமல் வழங்க வேண்டும். சுத்தமாக கடையை வைத்துக்கொள்ள வேண்டும். ரேஷன் பொருட்களை வைத்திருக்கும் இடத்தை தூய்மையாக வைத்திருக்க வேண்டும். தரையில் சிந்திய ரேஷன் பொருட்களை மக்களுக்கு விநியோகம் செய்யக்கூடாது என பல முக்கிய அறிவிப்புகளை கூட்டுறவுத் துறை அறிவித்து வருகின்றது.

இந்நிலையில் மேலும் ஒரு புதிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதாவது ரேஷன் கடைகளில் வழங்கப்படும் அரிசி, பருப்பு, கோதுமை, சர்க்கரை என அனைத்து பொருட்களையும் பாக்கெட்டுகளில் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். கூடிய விரைவில் தமிழகத்தில் அரிசி ஆலை தொடங்கப்படும் எனவும், ரேஷன் கடைகள் சீரமைக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |