நாடு முழுவதும் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் பலருக்கும் ரேஷன் கார்டில் சில பிரச்சனைகள் உள்ளன. அதிலும் குறிப்பாக அடையாள அட்டையில் ஏதாவது அப்டேட் செய்ய வேண்டிய சூழல் ஏற்படும் போது மக்கள் திணறுகிறார்கள். அதாவது ரேஷன் கார்டில் குடும்ப உறுப்பினர் பெயர் சேர்த்தல், நீக்குதல், மொபைல் நம்பர் மாற்றம், முகவரி மாற்றம் போன்ற தேவைகளுக்கு எங்கு செல்வது யாரை கேட்பது என்று மக்கள் சிந்திக்கின்றனர்.
இந்நிலையில் மக்களுக்கு ரேஷன் கார்டு தொடர்பான சேவைகளுக்காக மத்திய அரசு புதிய ஏற்பாடு செய்துள்ளது. அதாவது டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் பொது சேவை மையங்கள் அமைப்பும் உணவு மற்றும் பொது விநியோகத் துறையும் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த திட்டத்தின் மூலமாக ரேஷன் கார்டில் உள்ள பிரச்சனைகளுக்கு பொது சேவை மையங்களில் மக்கள் எளிதில் தீர்வு காணலாம்.
அது மட்டுமல்லாமல் ஆதார் இணைப்பையும் அங்கேயே ஏன் மேற்கொள்ள முடியும். பேச மாட்டிக்கு டூப்ளிகேட் பெறுவது போன்ற பல வகையான சேவைகளை,என்னென்ன ரேஷன் பொருட்கள் கிடைக்கும் என்ற விவரங்களை வாடிக்கையாளர்கள் இங்கு தெரிந்து கொள்ள முடியும் என அரசு தெரிவித்துள்ளது.