இந்தியாவில் ரேஷன் அட்டை மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. கொரோனா காலகட்டத்தில் பிரதான் மந்திரி கரீப் கல்யாண் அன்னை யோஜனா என்ற திட்டத்தின் கீழ் மக்களுக்கு இலவசமாக ரேஷன் பொருள் வழங்கப்பட்டது. இந்தத் திட்டம் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
அதன்படி உத்திரபிரதேசம் மாநிலத்தில் இந்த திட்டத்தின் கீழ் கலந்த 2020 ஆம் ஆண்டு முதல் மத்திய அரசிடம் ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஒரு யூனிட்டுக்கு 5 கிலோ கோதுமை மற்றும் அரிசி உள்ளிட்டவை இலவசமாக வழங்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் தானியங்கள் கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரை வழங்கப்படும் என அரசு அறிவித்தது.
இதற்கான கால அவகாசம் முடிவடைந்த நிலையில் மூன்று மாதங்களுக்கு நீட்டிப்பது தொடர்பாக மத்திய அரசு ஆலோசனை மேற்கொண்டது. இந்த ஆலோசனையில் ஜூன் முதல் ஆகஸ்ட் மாதம் வரை மூன்று மாதங்களுக்கு இந்த திட்டம் நீட்டிக்கப்பட்டது. இது தொடர்பாக உத்திரபிரதேச மாநில அரசு உத்தரவுப்படி,இந்த மாதம் முடிய உள்ள நிலையில் அழுத்த மாதத்திலிருந்து இந்த திட்டத்தின் கீழ் இலவசமாக பொருட்கள் வழங்கப்பட மாட்டாது என கூறப்படுகிறது.அத்துடன் செப்டம்பர் மாதத்திற்கு பிறகு இந்த திட்டத்தின் கீழ் ஒரு கிலோ கோதுமைக்கு இரண்டு ரூபாயும் ஒரு கிலோ அரிசிக்கு மூன்று ரூபாயும் செலுத்த வேண்டும் என எதிர்பார்க்கப்படுவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.