Categories
தேசிய செய்திகள்

ரேஷன் அட்டைதாரர்களுக்கு அதிரடி சலுகை…. மாநில அரசு வெளியிட்ட அசத்தலான அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் ரேஷன் கடைகளில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தும் வகையில் மத்திய உணவு வழங்கல் துறை அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி ரேஷன் கடைகளில் பொருட்களை பெற தகுதியற்றவர்களும் பயன்பெற்று வருவதும் குறைந்த விலையில் பொருள்களை பெற்று கள்ளச் சந்தையில் அதிக விலைக்கு விற்பதும் குறித்த புகார் எழுந்த நிலையில் ரேஷன் கார்டுகள் குறித்த விதிகளில் விரைவில் மாற்றப்பட போவதாக தகவல் வெளியானது.அதனால் தகுதியற்றவர்கள் ரேஷன் பொருட்களை பெற முடியாத சூழல் விரைவில் உருவாகக்கூடும்.

இந்நிலையில் உத்தரபிரதேசத்தில் அந்தோதயா என்று கூறப்படும் ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு ஆயுஷ்மான் காடை இலவசமாக வழங்குவதற்கு அரசு முடிவு செய்துள்ளது. ரேஷன் அட்டை வைத்திருக்கும் அனைவரிடமும் ஆயுஸ்மான் அட்டைகள் இருக்க வேண்டும் எனவும் இந்த காடு வைத்திருக்கும் பயனாளிகள் பல்வேறு வகையான வியாதிகளுக்கும் இலவசமாக சிகிச்சை பெற்று பயன்பெறலாம் எனவும் மாநில முதல்வர் தெரிவித்துள்ளார்.மேலும் இந்த கார்டை இ சேவை மையம் மூலமாக ரேஷன் அட்டைதாரர்கள் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |