அரசு சார்பில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு இலவச மருத்துவ சிகிச்சை வழங்குவதற்கு ஆயுஷ்மான் கார்டுகள் வழங்கப்படுகின்றன. இந்த திட்டம் மூலமாக ஆயுஷ்மான் கார்டு வைத்திருக்கும் பயனாளிகள் நாடு முழுவதும் இலவசமாக மருத்துவ சிகிச்சை செய்து கொள்ளலாம். இந்த திட்டத்தில் நீங்கள் பயன் பெற அந்தோதயா ரேஷன் அட்டை இருந்தால் போதும், அதற்காக ரேஷன் அட்டைதாரர்கள் ஆயுஷ்மான் கார்டு வாங்க வேண்டும். இந்த கார்டு பெற மக்கள் பொது சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பிக்கலாம். இந்த திட்டத்தில் சேர மத்திய, மாநில அரசு திட்டங்களின் கீழ் இலவச ரேஷன் வாங்கி இருந்தாலே போதுமானது.
அது மட்டுமில்லாமல் அந்தோதயா ரேஷன் அட்டை வைத்திருக்கும் அனைவரும் ஆயுஷ்மன் கார்டு பெறலாம். நாடு முழுவதும் இந்த திட்டத்தின் கீழ் இணைக்கப்பட்ட மருத்துவமனைகளில் இலவசமாக மருத்துவ சிகிச்சை பெறலாம். மேலும் அந்தோதயா திட்டத்தின் கீழ் பயன்பெறாதவர்களால் ஆயுஷ்மான் கார்டு பெற முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திட்டம் நாடு முழுவதும் ஏழை எளிய மக்களுக்கு பெரிய வர பிரசாதமாக இருக்கிறது.