தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அது மட்டுமல்லாமல் அரசு வழங்கும் நலத்திட்ட உதவிகளை பெறுவதற்கும் ரேஷன் கார்டு என்பதை மிக முக்கியமான ஆவணம். ஆனால் ரேஷன் கடைகளில் தகுதியற்ற பலரும் பயனடைந்து வருவதாக கடந்த சில நாட்களாக தொடர்ந்து புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன.
இந்நிலையில் தமிழகத்தில் ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களில் சுமார் 13 லட்சம் பேர் தொடர்ந்து மூன்று மாதங்களாக எதுவும் வாங்காமல் உள்ளனர். இதனால் முறைகேடுகள் நடக்க வாய்ப்பு இருப்பதால் கூட்டுறவுத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், ரேஷன் பொருட்கள் வாங்காதவர்கள், தேவையில்லை என்பவர்கள் கௌரவ அட்டை என்ற முறை உள்ளது. இதனை பெற்றுக் கொள்ளுங்கள் என அவர் கூறியுள்ளார்.இதைப் பற்றி போதிய விழிப்புணர்வு இல்லாமல் இருந்தாலும் தமிழகத்தில் 60 ஆயிரம் பேர் இந்த அட்டை வைத்திருக்கின்றனர்.