தமிழகத்தில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகளை ஆய்வு செய்யும் அலுவலர்களுக்கான செயலியை அமைச்சர் சக்கரபாணி நேற்று அறிமுகம் செய்து வைத்தார். இது தொடர்பாக பேசிய அவர்,இந்த செயலி மூலமாக மாதந்தோறும் ரேஷன் கடைகள் செய்ய வேண்டிய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. அதன் மூலம் மக்களுக்கு சிறந்த சேவை வழங்க முடியும்.இந்த வருடம் இரண்டு லட்சத்து 16 ஆயிரம் மெட்ரிக் டன் கூடுதலாக நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. ரேஷன் கடைகளில் 98.3% பயனாளிகள் பயோமெட்ரிக் முறையில் பொருட்களை வாங்குகிறார்கள்.
திருவல்லிக்கேணி மற்றும் அரியலூர் ஆகிய மாவட்டங்களில் சோதனை முறையில் கருவிழி ஸ்கேனர் மூலம் பொருட்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. மிக விரைவில் தமிழக முழுவதும் இந்த திட்டம் செயல்படுத்த முதலமைச்சரிடம் பரிந்துரைக்கப்படும்.மேலும் ஜனவரி மாதம் முதல் தர்மபுரி மற்றும் நீலகிரி ஆகிய மாவட்டங்களில் சிறுதானியங்கள் சோதனை முறையில் ரேஷன் கடைகளில் விநியோகம் செய்யப்பட உள்ளது.அதன் பிறகு மற்ற மாவட்டங்களுக்கு சிறுதானியங்கள் விநியோகம் விரிவுபடுத்தப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.