நாடு முழுவதும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு மத்திய அரசு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவு பொருட்களை வழங்கி வருகிறது. ரேஷன் அட்டை வைத்துள்ளவர்களுக்கு மட்டுமே அரசு வழங்கும் அனைத்து சலுகைகளும் கிடைக்கும். தற்போது கோடிக்கணக்கான மக்கள் பயன்பெறும் விதமாக மத்திய அரசு ரேஷன் விதிகளில் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வந்துள்ளது. அதாவது இலவச ரேஷன் வழங்கும் வசதியுடன் போர்ட்டபிள் ரேஷன் கார்டு வசதியையும் அரசு தற்போது தொடங்கியுள்ளது. இந்த வசதி பல மாநிலங்களில் தற்போது தொடங்கப்பட்டுள்ள நிலையில் விரைவில் நாடு முழுவதும் இந்த திட்டத்தை தொடங்குவதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
அதன்படி கையடக்க ரேஷன் கார்டு வசதி அமலுக்கு வந்த பிறகு நாட்டின் எந்த மூலையிலும் ரேஷன் வசதியை எளிதாக பெற முடியும். இதற்காக தனியாக ஒரு அட்டையை புதிதாக வாங்க வேண்டிய அவசியம் இல்லை. உங்கள் பழைய ரேஷன் கார்டு மூலமாகவே இந்த வசதியின் பலனை பெற முடியும். தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தின் கீழ் தகுதியான பயனாளிகளுக்கு அரசு மாதம் இருமுறை ரேஷன் ஒதுக்கீட்டை வழங்குகின்றது. பிரதம மந்திரி கரீப் கல்யாண் அன்னை யோஜனா திட்டத்தின் கீழ் இலவச ரேஷன் வசதி வழங்கப்பட்டு வருகிறது.
இதில் கோதுமை மற்றும் அரிசி தவிர பல மாநிலங்களில் எண்ணெய், உப்பு மற்றும் சர்க்கரையும் வழங்கப்பட்டு வருகிறது. இதனுடன் சேர்த்து 12 கிலோ மாவு மற்றும் 500 கிராம் சர்க்கரையும் வழங்கப்படுகிறது. அதே சமயம் இலவச ரேஷன் விநியோகத்தில் ஏதாவது இடையூறு ஏற்படுவதை தடுக்கும் விதமாக வீட்டிற்கு எடுத்துச் செல்லும் ரேஷன் முறையை ஆன்லைனில் மாற்றம் செய்வதற்கு அரசு திட்டமிட்டுள்ளது. அதனால் மத்திய அரசு வழங்கும் ரேஷனில் எந்தவித குளறுபடியும் யாரும் செய்ய முடியாது. இந்த புதிய முறை அமல்படுத்தப்பட்ட பின்னர் ஆலை முதல் ரேஷன் விநியோகம் வரை அனைத்து நடவடிக்கைகளையும் கண்காணிக்க முடியும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.