Categories
தேசிய செய்திகள்

ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு…. ரேஷன் கடைகள் செயல்படும் நேரத்தில் புதிய மாற்றம்…. இதோ முழு விவரம்….!!!!

நாடு முழுவதும் ஏழை எளிய மக்களுக்காக ரேஷன் கடைகள் மூலமாக இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. தற்போது ரேஷன் கடைகளில் பயோமெட்ரிக் மூலம் மாதாந்திர ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்யப்படுகின்றன. இந்நிலையில் கேரளாவில் ரேஷன் கடை உரிமையாளர்கள் சங்கத்தினர் டிசம்பர் 26 ஆம் தேதி முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவித்துள்ளனர். அதனால் மக்கள் கூட்டம் ரேசன் கடைகளில் அதிகரித்துள்ளது. இதனால் டிசம்பர் 1ஆம் தேதி முதல் பயோமெட்ரிக் முறையில் பொருட்கள் வினியோகம் செய்யப்படவில்லை. தற்போது ரேஷன் கடை உரிமையாளர்கள் சங்கம் ரேஷன் கடைகள் ஷிப்ட் முறையில் செயல்படும் என்றும் ஏழு மாவட்டங்களுக்கு தனி நேரமும் மற்ற மாவட்டங்களுக்கு தனிநேரமும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அவ்வகையில் பத்தனம்திட்டா, வயநாடு, ஆலப்புழா, கொல்லம், பாலக்காடு,திருச்சூர், மலப்புரம், ஆகிய மாவட்டங்களில் டிசம்பர் 5 முதல் 10 ம் தேதி வரையிலும், 19 முதல் 24ம் தேதி வரையிலும் 8 மணி முதல் மதியம் 1 மணி வரை செயல்படும், மேலும், டிசம்பர் 12 முதல் 17 மற்றும் 26 முதல் 31 வரை மதியம் 2 மணி முதல் 7 மணி வரை செயல்படும். இதேபோல், கண்ணூர், கோட்டயம், கோழிக்கோடு, திருவனந்தபுரம், எர்ணாகுளம், காசர்கோடு மற்றும் இடுக்கி ஆகிய மாவட்டங்களில் டிசம்பர் 12 முதல் 17 வரையிலும், டிசம்பர் 26 முதல் 31 வரையிலும் காலை நேரத்திலும், டிசம்பர் 5 ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரையிலும், 19ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை பிற்பகல் நேரத்திலும் செயல்படும் .

Categories

Tech |